சமையல்

குழந்தைகளின் நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா தோசை

Published On 2023-04-27 06:44 GMT   |   Update On 2023-04-27 06:44 GMT
  • மசால் தோசை எனில் உருளைக்கிழங்கு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள்.
  • இன்று முட்டை சேர்த்து மசாலா தோசை செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - 1 கப்

முட்டை - 4

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

கடுகு - அரை ஸ்பூன்

மிளகு தூள் - அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்

தனியா தூள்- அரை ஸ்பூன்

மிளகாய் தூள்- அரை ஸ்பூன்

கரம் மசாலா- அரை ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்து

கொத்தமல்லித்தழை - கையளவு

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முட்டையை ஒரு பௌலில் ஊற்றி நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக அரிந்து வைத்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் கொஞ்சம் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு தக்காளியை சேர்த்து குழை வதக்கி விட வேண்டும்.

தக்காளி நன்கு மசிந்த பிறகு , மஞ்சள் தூள், தனியாதூள், மிளகாய் தூள், கரம் மசாலா ஆகிய மசாலாக்களை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும் .

இப்போது முட்டையை ஊற்றி உப்பு, மிளகுத் தூள் சேர்த்து முட்டை நன்றாக உதிர்ந்து வரும் வரை கிளறி விட வேண்டும்.

அடுப்பில் தோசைக்கல் வைத்து , கல் சூடானதும் மாவை சற்று தடிமனாக ஊற்றி அதன் மேல் முட்டை மசாலாவை தோசை மேல் தோசை முழுவதும் பரப்பி விட வேண்டும். சுற்றி சிறிது எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வெந்த பிறகு எடுத்து , மேலே கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறினால் எத்தனை வைத்தாலும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

இப்போது சூடான முட்டை மசாலா தோசை ரெடி.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News