கோடை காலத்திற்கு ஏற்ற இளநீர் சர்பத்
- உடல் உஷ்ணத்தை போக்கும் மாமருந்தாக இளநீர் இருக்கிறது.
- அனைவருமே இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம்.
உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் கொண்டு சர்பத் செய்தால், அதன் சுவை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். உடல் உஷ்ணத்தை போக்கும் மாமருந்தாக இளநீர் இருக்கிறது. சுவை மற்றும் உடல் ஆரோக்கியம் என்ற இந்த இரண்டும் கலந்து இருக்கும்.
குழந்தைகள் உள்பட அனைவரும் நிச்சயம் விரும்புவார்கள். உடல் புத்துணர்வுக்கான சத்துகள் இதில் இருப்பதால், அனைவருமே இதை தவிர்க்காமல் உண்டு மகிழலாம். மேலும், வெயிலுக்கு இதமான குளுகுளு இளநீர் சர்பத் எப்படி தாயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இளநீர்- 2
கடல்பாசி (அகர் அகர்)- ஒரு கைபிடி
சர்க்கரை- 200 கிராம்
கண்டன்ஸ்டுமில்க்- 3 ஸ்பூன்
பால்- அரை லிட்டர்
சப்ஜா விதை- ஒரு ஸ்பூன்
செய்முறை:
முதலில் சப்ஜா விதைகளை நீரில் பொட்டு உறவைத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் இளநீரினை ஊற்றி அதில் கடல்பாசி மற்றும் சர்க்கரை சேர்த்து நன்றாக கரைந்து போகிற அளவுக்கு கலந்துவிட வேண்டும். பின்னர் இதனை ஒரு பிளேட்டில் ஊற்றி ஃபிரிட்ஜில் ஒருமணிநேரம் வைக்க வேண்டும். ஒருமணிநேரம் கழித்து எடுத்து பார்த்தால் அது ஜெல்லி மாதிரி இருக்கும். இதனை சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் காய்ச்சிய பாலை ஊற்ற வேண்டும். இந்த பாலில் கண்டன்ஸ்டு மில்க், ஊறவைத்த சப்ஜா விதை, நாம் ஏற்கனவே செய்து வைத்துள்ள இளநீர் ஜெல்லி, இளநீரில் உள்ள வழுக்கைகளை சிறிது சிறிதாக வெட்டி இதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்த இளநீர் சர்பத்தினை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.
இந்த கோடை காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இந்த இளநீர் சர்பத் உங்களுக்கு உதவியாக இருக்கும். நீங்களும் உங்களது வீடுகளில் செய்துபாருங்கள்.