சமையல்

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு - காய்கறி சூப்

Published On 2023-03-30 06:29 GMT   |   Update On 2023-03-30 06:29 GMT
  • தினமும் கேழ்வரகை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.
  • கேழ்வரகில் சத்தான பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.

தேவையான பொருட்கள்

கேழ்வரகு மாவு - 3 ஸ்பூன்,

தண்ணீர் - 4 கப்,

கேரட் - 1

பசலை கீரை - அரை கப்

பச்சை பட்டாணி - கால் கப்

காலிஃப்ளவர் - சிறிதளவு

துருவிய கோஸ் - கால் கப்

பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்

சோயா பீன்ஸ் - கால் கப்

பீன்ஸ் - கால் கப்

எலுமிச்சை பழம் - பாதி

உப்பு - தேவைக்கு

மிளகு தூள் - தேவைக்கு

கொத்தமல்லி தழை - சிறிதளவு

நெய் - 1 ஸ்பூன்

செய்முறை

* கடாயில் நெய் ஊற்றி சூடானதும் கேழ்வரகு மாவை போட்டு வறுத்து கொள்ளவும்.

* பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* காலிஃப்ளவரை சிறிய பூக்களாக உதிர்த்து வைக்கவும்.

* கேழ்வரகு மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்.

* ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் நெய், பீன்ஸ், கேரட், பசலைக்கீரை, காலிஃப்ளவர், சோயா பீன்ஸ், துருவிய கோஸ், பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து மிதமான தீயில் 12 நிமிடம் கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து கொதிக்கவிடவும்.

* கரைத்த வைத்த கேழ்வரகு கரைசலை ஊற்றி(கட்டி விழக்கூடாது) நன்றாக கலக்கி விடவும். அதை 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.

* அடுத்து அதில் மிளகுத்தூள், கொத்தமல்லி தழை, எலுமிச்சை சாறு சேர்த்து 1 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.

* இப்போது சூப்பரான கேழ்வரகு - காய்கறி சூப் ரெடி.

* விருப்பான எல்லா காய்கறிகளையும் இதில் சேர்த்து கொள்ளலாம்.

Tags:    

Similar News