சமையல்

தினை - தேங்காய்ப்பால் புலாவ்

Published On 2022-09-30 07:12 GMT   |   Update On 2022-09-30 07:12 GMT
  • சிறுதானியங்களை அடிக்கடி சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • சிறுதானியங்களில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

தினை அரிசி - ஒரு கப்

தேங்காய் - அரை மூடி (துருவி பால் எடுக்கவும்)

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்)

தண்ணீர் - ஒரு கப்

பச்சைப் பட்டாணி - அரை கப்

இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்)

எண்ணெய் - 4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

பட்டை - 2

சோம்பு - கால் டீஸ்பூன்

பிரியாணி இலை - ஒன்று

ஏலக்காய் - ஒன்று

செய்முறை:

தினை அரிசியை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

குக்கரில் எண்ணெய்விட்டுத் தாளிக்கக் கொடுத்துள்ள பொருள்களைத் தாளிக்கவும்.

அதனுடன் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

இஞ்சி - பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, ஒரு கப் தேங்காய்ப்பால், தண்ணீர், உப்பு, தினை அரிசி சேர்த்து ஒரு கொதிவிடவும்.

பிறகு, குக்கரை மூடி, ஒரு விசில்விட்டு இறக்கவும்.

இப்போது சூப்பரான தினை - தேங்காய்ப்பால் புலாவ் ரெடி.

Tags:    

Similar News