சமையல்

ஆரோக்கியம் நிறைந்த ஆளி விதை லட்டு

Published On 2024-01-28 07:20 GMT   |   Update On 2024-01-28 07:20 GMT
  • லட்டு வகைகள் குளிர்க் காலங்களில் பிரத்யேகமாக தயாரிக்கிறார்கள்.
  • ஆளி விதை லட்டில் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.

வட இந்திய வீடுகளில் பசு நெய், பாதாம் பிசின் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பல்வேறு லட்டு வகைகள் குளிர்க் காலங்களில் பிரத்யேகமாக தயாரிக்கிறார்கள். உண்பதற்கு அற்புதமாக இருக்கும் லட்டுகளில் பல்வேறு ஆரோக்கியமான நன்மைகளும் உள்ளன.

தேவையான பொருள்கள்:

பாதாம்- அரை கப்

முந்திரி- அரை கப்

அரைத்த ஆளி விதை- அரை கப்

அரைத்த வெல்லம்- அரை கப்

பசு நெய்-- கால் கப்

செய்முறை:

மிக்சியிலோ, ப்ளேண்டரிலோ, பாதாமைப் போட்டு, முழுவதும் பொடியாகும் வரை அரைக்க வேண்டும். அதனைத் தனியாக பிளேட் ஒன்றில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக முந்திரியையும், பாதாம் போலவே அரைத்து, தனியாக ஒரு பிளேட்டில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று ஆளிவிதையையும் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு பாத்திரத்தில், நாம் ஏற்கனவே அரைத்த பாதாம், முந்திரி ஆகியவற்றுடன் அரைத்த ஆளி விதை, பொடித்த வெல்லம் ஆகியவற்றைச் சேர்த்து, அதனோடு பசு நெய்யையும் சேர்த்து, நன்கு பிசைய வேண்டும்.

தற்போது அதனை சிறிய உருண்டைகளாக கையால் பிடித்து வைக்க வேண்டும். உலர்ந்து போனால் சிறிது நெய் சேர்க்கலாம். மற்றபடி அதிகம் நெய் சேர்க்காமல், லட்டுக்குத் தேவையான அளவில் அதனை உருட்ட வேண்டும். தற்போது லட்டுகள் தயார். இவற்றை காற்று புகாத பிளாஸ்டிக் கண்டெய்னரில் போட்டு வைக்கலாம். இவை உடலுக்கு ஆரோக்கியம் நிறைந்தவை.

Tags:    

Similar News