சப்பாத்தி, சாதத்திற்கு அருமையான கொள்ளு மசாலா
- உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்கும்.
- கொள்ளு அதிக சூடு நிறைந்தது. தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.
தேவையான பொருட்கள்
கொள்ளு - 1 கப்,
பெரிய வெங்காயம் - 1,
தக்காளி - 1,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி,
மல்லித்தூள் - 1 தேக்கரண்டி,
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி,
கரம் மசாலாத்தூள் - 1/2 தேக்கரண்டி,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 1 தேக்கரண்டி,
கொத்தமல்லித்தழை - சிறிது.
செய்முறை
* கொள்ளுவை மலர வேகவிடவும்.
* தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
* தக்காளி குழைய வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
* இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கவும்.
* சிறிது தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும், உப்புப்போடவும்.
* வேக வைத்த கொள்ளுவை ஓரளவு மசித்து சேர்க்கவும்.
* மசாலா திக்கான பதம் வந்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறலாம்.
* இப்போது சூப்பரான கொள்ளு மசாலா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health