சமையல்

உடலை வலுவாக்கும் கொள்ளு துவையல்

Published On 2023-05-13 05:38 GMT   |   Update On 2023-05-13 05:38 GMT
  • ஊளைச்சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.
  • அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 1 கைப்பிடி

தேங்காய் - கால் மூடி

சிவப்பு மிளகாய் - 7

பூண்டு - 6 பல்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தேங்காயினை துருவி வைத்துக் கொள்ளவும்.

ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொள்ளினைப் போட்டு அடுப்பினை இளந்தீயில் வைத்து, நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.

தேங்காய் துருவல், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.

கொள்ளு துவையல் தயார்.

கொள்ளு தானியத்தை நம் உணவில் அடுக்கடி சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஏற்படும் தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் தீரும் என சொல்லப்படுகிறது. சாப்பாட்டில் கொள்ளு சேர்ப்பதால் நல்ல கண் பார்வை கிடைக்கும் என்றும், ஜுரம் அதிகமாக இருக்கும்போது கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் ஜுரம் சரியாகும் என்றும் கூறப்படுகிறது. வாதப் பிரச்சினைகளும், வயிற்று வலியும் குணமாகும். கொள்ளினை உணவில் சேர்ப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News