சமையல்

வாழைப்பழம் இருக்கா..? அப்ப `அல்வா' செய்யலாம் வாங்க...!

Published On 2024-03-01 10:30 GMT   |   Update On 2024-03-01 10:30 GMT
  • வாழைப்பழம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது.
  • வாழைப்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

வாழைப்பழம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. ஏனெனில், அதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் அவை ஆற்றலின் களஞ்சியமாகும். எனவே, நாம் தினமும் வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். ஒருவேளை உங்களுக்கு வாழைப்பழம் சாப்பிட பிடிக்கவில்லை என்றால், வாழைப்பழம் அல்வா செய்து சாப்பிடுங்கள்.

பொதுவாகவே, கேரட் அல்வா, பீட்ரூட் அல்வா போன்றவற்றை தான் வீடுகளில் செய்வார்கள். ஆனால் வாழைப்பழ அல்வாவை ருசித்தவர்கள் வெகு சிலரே. நீங்கள் இனிப்புகளை சாப்பிட விரும்புபவர்கள் என்றால் வாழைப்பழத்தில் செய்யப்படும் அல்வாவை கண்டிப்பாக முயற்சி செய்து பாருங்கள். வாழைப்பழம் அல்வா செய்யும் முறையை பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 5

சர்க்கரை - 1/4 கப்

நெய் - 1/2 கப்

ஏலக்காய் தூள் - 1 ஸ்பூன்

தண்ணீர் - 1/4 கப்

முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பழம் அல்வா செய்ய முதலில் வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். இப்போது அந்த துண்டுகளை மசிக்க வேண்டும் அல்லது மிக்சி ஜாரில் அரைக்க வேண்டும். அதே நேரத்தில், அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நெய் சேர்த்து சூடாக்க வேண்டும். நெய் சூடானதும் அதில் முந்திரி உலர் திராட்சையை வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் அதே பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை பாகு நிலைக்கு வந்தவுடன் அதனுடன் அதில் அரைத்து வைத்த வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிதளவு நெய்யும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றை நன்கு வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும். வாழைப்பழம் நன்கு வெந்தவுடன் நிறம் மாறும். கடைசியாக ஏலக்காய் தூள் வருத்த முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து கிளர வேண்டும். அவ்வளவுதான் இப்போது சுவையான வாழைப்பழ அல்வா ரெடி.

Tags:    

Similar News