- இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
- தோசை, சப்பாத்திக்கு அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கத்திரிக்காய் - 4
துவரம் பருப்பு - 1/4 கப்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
புளி நீர் - 1 கப்
வெல்லம் - 1 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
கடலை பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 1
மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* கத்தரிக்காயை துண்டுகளாக நறுக்கவும்.
* துவரம் பருப்பை நன்றாக குழைய வேக வைத்து கொள்ளவும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, மல்லி, வரமிளகாய், மிளகு ஆகியவற்றைப் போட்டு நன்கு வறுத்ததும், துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் கத்திரிக்காயை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். வாணலியை மூடி வைத்து நன்கு மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும்.
* கத்திரிக்காய் நன்கு வெந்ததும், அதில் புளி நீர், மஞ்சள் தூள், வெல்லம், வேக வைத்த பருப்பு மற்றும் அரைத்த தேங்காய் விழுது மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் புளியின் பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான கத்திரிக்காய் ரசவாங்கி தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health