சமையல்

கேரளா ஸ்டைல் சுருளப்பம்

Published On 2023-08-20 10:18 GMT   |   Update On 2023-08-20 10:18 GMT
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
  • அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

மைதா- ஒரு கப்

முட்டை- 1

உப்பு, சர்க்கரை- தலா ஒரு சிட்டிகை

ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்

பால்- அரை கப்

தேங்காய் பால்- ஒரு கப்

தேங்காய் துருவல் ஒரு கப்

நெய்- தேவையான அளவு

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் அரை கப் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். மாவுக்கலவை கட்டி இல்லாமல் நன்றாக அடித்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த மாவுக்கலவையை தோசை தவாவில் நெய் தடவி ஊற்றி மூடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு சிறிய பாத்திரத்தில் துருவிய தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

வேகவைத்த அப்பத்தின் நடுவே கலந்து வைத்து தேங்காய் துருவல் கலவையை சேர்த்து அதனை சுருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனை சாப்பிடும் போது இதனுடன் தேங்காய் பால் இதற்கு மேல் ஊற்றி பரிமாறவும். கேரளா ஸ்டைலில் சுவையான சுருளப்பம் தயார். இதனுடன் சூடான லெமன் டீ, அல்லது புதினா டீ நல்ல காமினேஷனாக இருக்கும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவாக எடுத்துக்கொள்ள ஏற்றது. எளிய முறையில் தயார் செய்துகொள்ளலாம். அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம். நேரமும் மிச்சமாகும்.

Tags:    

Similar News