சமையல்

குல்பி இட்லி

Published On 2023-10-15 10:44 GMT   |   Update On 2023-10-15 10:44 GMT
  • மாவை 8 மணி நேரத்துக்கு புளிக்க வைக்க வேண்டும்.
  • டம்ளர்களின் உள்பகுதி முழுவதும் நெய் அல்லது நல்லெண்ணெய் தடவ வேண்டும்.

தேவையான பொருட்கள்:

இட்லி அரிசி - 4 டம்ளர்

உளுந்து - 1 டம்ளர்

வெந்தயம்-1 டீஸ்பூன்

அவல்-1/2 டம்ளர்

ஐஸ்கிரீம் குச்சிகள் - தேவையான அளவு

செய்முறை:

இட்லி அரிசியையும், அவலையும் நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாக கொட்டி, தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த உளுந்து மற்றும் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்னர் அரிசி மற்றும் அவலை முதலில் இட்லி மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு உளுந்தையும், வெந்தயத்தையும் அரைக்க வேண்டும். இப்போது இரண்டு மாவையும் நன்றாகக் கலந்து ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி வைக்க வேண்டும்.

இந்த கலவையை 8 மணி நேரத்துக்கு புளிக்க வைக்க வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். சிறு சிறு டம்ளர்களின் உள்பகுதி முழுவதும் நெய் அல்லது நல்லெண்ணெய் தடவ வேண்டும். இட்லி மாவை டம்ளரின் முக்கால் அளவிற்கு மட்டும் ஊற்றி, நடுவில் ஐஸ்கிரீம் குச்சிகளை சொருக வேண்டும். இவற்றை இட்லி வேகவைப்பது போல நீராவியில் வேகவைத்து எடுக்க வேண்டும். இது ஆறிய பிறகு டம்ளரில் இருந்து மெதுவாக வெளியே எடுக்கவும். இப்போது 'குல்பி இட்லி` தயார். சட்னி, குருமா அல்லது சாம்பார் ஆகியவற்றை சிறு சிறு கிண்ணங்களில் ஊற்றி அழகான

தட்டில் வைத்து சூடாக பரிமாறவும். இதேபோம்று மசாலா குல்பி இட்லி, காஞ்சீபுரம் குல்பி இட்லியும் விதவிதமாக தயார் செய்யலாம். நீங்களும் செய்து அசத்துங்கள்.

Tags:    

Similar News