சமையல்

சூப்பரான ஸ்நாக்ஸ் குல்லே கி சாட்

Published On 2023-06-29 09:32 GMT   |   Update On 2023-06-29 09:32 GMT
  • டெல்லியில் மிகவும் பிரபலமான, சுவையான உணவுகளில் ஒன்று குல்லே கி சாட்.
  • இதை உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், பழங்களில் செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருள்கள்:

உருளைக்கிழங்கு - 2

கொண்டைக்கடலை - கால் கப்

இஞ்சி - சிறிய துண்டு

பச்சை மிளகாய் - 1

மாதுளை - சிறிதளவு

எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி

கல் உப்பு - தேவைக்கேற்ப

பிளாக் சாட் மசாலா - தேவைக்கேற்ப

செய்முறை :

கொண்டைக்கடலையை வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து, அவற்றை தோல் உரித்து கொள்ளுங்கள். பின்னர் உருளைக்கிழங்கை இரண்டாக வெட்டி ஸ்பூன் வைத்து நடுவில் குழி போல் வெட்டி எடுக்கவும். இப்போது பார்க்க கிண்ணம் போல் இருக்கும்.

எடுத்த உருளைக்கிழகை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் வேக வைத்த பின்னர் கொண்டைக்கடலை, பச்சை மிளகாய், மாதுளை, இஞ்சி, உப்பு, பிளாக் சாட் மசாலா மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை போட்டு நன்றாக கலந்து வைக்கவும்.

இப்போது கலந்த கலவையை உருளைக்கிழங்கு கிண்ணத்தில் போட்டு சாப்பிடுங்கள்.

இது மிகவும் சுவையானது மட்டுமல்லாமல் மிகவும் ஆரோக்கியமானது.

இதோ போல் உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், பழங்களில் செய்து சாப்பிடலாம்.

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News