சமையல்

15 நிமிடத்தில் செய்யலாம் மாலை நேர ஸ்நாக்ஸ் குணுக்கு

Published On 2023-07-08 09:36 GMT   |   Update On 2023-07-08 09:36 GMT
  • வீட்டில் மீந்து போன இட்லி மாவைக் கொண்டு குணுக்கு செய்யலாம்.
  • இந்த குணுக்கு போண்டா போன்று இருக்கும்.

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு - 1 பெரிய கப்

மைதா - 2 டேபிள் ஸ்பூன்

சமையல் சோடா - 1 சிட்டிகை

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)

கறிவேப்பிலை - சிறிது

கடுகு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை:

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, மைதா சேர்த்து, அத்துடன் வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

அடுத்து அதில் சமையல் சோடா, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு சிறு கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் குணுக்கு ரெடி!!!

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News