குழந்தைகளுக்கு விருப்பமான மேகி நூடுல்ஸ் ஆம்லெட்
- குழந்தைகளுக்கு மேகி நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று மேகி நூடுல்ஸ், முட்டை சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மேகி பாக்கெட் - 1
முட்டை - 2
கேரட் துருவல் - 2 டீஸ்பூன்
குடைமிளகாய் - 1
தக்காளி - 1 (சிறியது)
ப.மிளகாய் - 3
வெங்காயம் - 1 (சிறியது)
உப்பு, எண்ணெய் - சிறிதளவு
மஞ்சள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய் , குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும் .
மேகியை கடாயில் போட்டு 1 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள். அதில் இருக்கும் மசாலாவை மட்டும் போட்டு வேக வைத்தால் போதும். தண்ணீர் இறுகும்வரை வேக வேண்டும். தண்ணீர் அதிகமாகிவிட்டால் வடித்துக்கொள்ளுங்கள். மேகி குழையாமல் உதிரியாக இருக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கேரட் துருவல், குடைமிளகாய், தக்காளி, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
தோசை தவாவை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் முட்டை கலவையை நன்கு பரப்பி ஊற்றுங்கள். தீ குறைத்து வைத்து அதன் மேலே வேக வைத்த மேகியை தூவினாற்போல் போடுங்கள். சிறு தீயிலேயே 2 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.
பின் தோசையை மடிப்பது போல் ஒரு புறமாக மடித்துக்கொள்ளுங்கள். திருப்பிப் போடக் கூடாது. மடித்த வாக்கில் அப்படியே தட்டி எடுத்து வைத்து பரிமாறவும்.
அவ்வளவுதான் மேகி நூடுல்ஸ் ஆம்லெட் தயார்.