சமையல்

மணத்தக்காளி கீரை சூப்

Published On 2024-05-09 06:22 GMT   |   Update On 2024-05-09 06:22 GMT
  • மணத்தக்காளி கீரை வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றும்.
  • வெங்காயம் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும்.

மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு சத்துக்களை கொண்டு வந்து சேர்க்கும். இதன் இலை, காய் பழம், வேர் ஆகிய அனைத்துமே பலன்களை கொண்டுள்ளது. மணத்தக்காளி கீரை வாயிலும், வயிற்றிலும் உண்டாகும் புண்களை ஆற்றுவதுடன், சளியை நீக்கி உடலை வலுப்பெறச் செய்கிறது.

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி கீரை - ஒரு கட்டு

சின்ன வெங்காயம் - 15

பூண்டு - 10

சீரகம் - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

மிளகு - 1 ஸ்பூன்

தக்காளி - 2 பொடியாக நறுக்கியது

பெருங்காய தூள் - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானதும் பூண்டை தட்டி சேர்க்கவும். பூண்டு பொரிந்தவுடன் மிளகு, சோம்பு, சீரகத்தை பொடித்து சேர்க்க வேண்டும்.

அதனுடன் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும். உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு சுத்தம் செய்த கீரையை போட்டு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

சுவையான மணத்தக்காளி கீரை சூப் ரெடி. மணத்தக்காளி கீரை சூப் வளரும் குழந்தைகள், இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவருமே சாப்பிடலாம்.

Tags:    

Similar News