சமையல்

மங்களூர் ஸ்டைல் காளான் நெய் ரோஸ்ட்

Published On 2024-05-13 09:04 GMT   |   Update On 2024-05-13 09:04 GMT
  • காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன.
  • ஊட்டச்சத்துக்கள் காளான்களில் நிரம்பியுள்ளன.

அனைத்து வகையான காளான்களில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளன. அதோடு கூட அவை நிறைந்த அளவு நார்ச்சத்துக்களையும் கொண்டுள்ளன. புரதங்கள், வைட்டமின் C, B கொண்டுள்ளன. D, தாமிரம், பொட்டாசியம், பாஸ்பரஸ், செலினியம், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களும் காளான்களில் நிரம்பியுள்ளன. காளான் குழந்தைகளுக்கு வலிமையை தரும் ஒரு உணவு ஆகும்.

தேவையான பொருட்கள்:

கிராம்பு- 2

சோம்பு- ஒரு ஸ்பூன்

பேப்ரிக்கா சில்லி- 20

வெங்காயம்- 2

பூண்டு- 10 பல்

தனியா- ஒரு ஸ்பூன்

மிளகு- கால் டீஸ்பூன்

சீரகம்- கால் டீஸ்பூன்

வெந்தயம்- சிறிதளவு

காளான்- கால் கிலோ

எண்ணெய்- தேவையான அளவு

உப்பு- தேவையான அளவு

புளி- சிறிதளவு

வெல்லம்- சிறிதளவு

செய்முறை:

முதலில் காளானை சுத்தம் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சில்லி, வெங்காயம், தனியா, பூண்டு, சீரகம், மிளகு, சோம்பு, கிராம்பு, வெந்தயம் போன்றவற்றை மிக்சி ஜாரில் போட்டு பேஸ்ட் மாதிரி அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன்பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் 3 கரண்டி நெய் விட்டு காய்ந்தவுடன் அதில் கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை அதில் சேர்க்க வேண்டும். நன்றாக கலந்துவிட வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு அதில் சிறிதளவு புளியை கரைத்து சேர்க்க வேண்டும்.

பின்னர் இந்த கலவை கொத்தவுடன் சிறிதளவு வெல்லம் சேர்க்க வேண்டும். அதன்பிறகு காலானை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். தண்ணீர் வேண்டும் என்றால் சேர்த்துக்கொள்ளலாம். இல்லை என்றால் காளனிலேயே தண்ணீர் இருக்கும். இந்த கலவை வெந்து கிரேவி பதம் வந்ததும் கறிவேப்பிலை தூவி இறக்கினால் சுவையான காளான் கீ ரோஸ்ட் தயார். 

 

Tags:    

Similar News