சமையல்

10 நிமிடத்தில் செய்யலாம் மசாலா பிரெட் டோஸ்ட்

Published On 2022-12-31 06:04 GMT   |   Update On 2022-12-31 06:04 GMT
  • வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே இதை செய்யலாம்.
  • காலையில் இட்லி, தோசைக்கு பதில் இதை செய்யலாம்.

தேவையான பொருட்கள்

பிரெட் துண்டுகள் - 5

முட்டை - 3 

பெரிய வெங்காயம் -1

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

பச்சை மிளகாய் - 2

சில்லி ப்ளேக்ஸ் - ½ தேக்கரண்டி

மிளகு தூள் - ¾ தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

வெண்ணை - 2 - 3 தேக்கரண்டி 

செய்முறை

வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி நுரை வரும்வரை அடித்துக் கொள்ளவும்.

பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, சில்லி ப்ளேக்ஸ், மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பிரெட்டை எடுத்து கலந்து வைத்துள்ள முட்டை கலவையில் முக்கி எடுத்து தோசைக்கல்லில் போட்டு மிதமான தீயில் வேகவைக்கவும்.

தீயை குறைத்து வைக்கவும். அப்போது தான் உள்ளே நன்றாக வேகும்.

ஒவ்வொரு பக்கமும் 1 - 2 நிமிடங்களுக்கு வேக வைக்கவும், அவ்வபோது திருப்பி போடவும். நன்றாக வெந்த பின்னர் எடுத்து பரிமாறவும்.

இப்போது சுவையான மசாலா பிரெட் ரோஸ்ட் தயார்.

Tags:    

Similar News