சமையல்

10 நிமிடத்தில் செய்யலாம் மசாலா பப்பட் சாட்

Published On 2023-06-10 09:41 GMT   |   Update On 2023-06-10 09:41 GMT
  • ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்குச் சத்து நிறந்த உணவைக் கொடுக்க வேண்டும்.
  • இன்று ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பஞ்சாபி மிளகு அப்பளம் - 5 (பெரியது)

வெங்காயம் - 150 கிராம்

தக்காளி - 100 கிராம்

வெள்ளரிக்காய் - 1,

கேரட் - 2

கொத்தமல்லி - தேவையான அளவு

ஓமப்பொடி - 2 கப்

சாட் மசாலா - 3 டீஸ்பூன்

சர்க்கரை - 2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

வெங்காயம், தக்காளி, வெள்ளரிக்காய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கேரட்டை துருவிக்கொள்ளவும்.

அப்பளத்தின் இரு புறமும் சிறிது எண்ணெய் தடவி மைக்ரோவேவ் அவனில் இரண்டு நிமிடங்கள் வைத்து நன்கு சுட்டெடுங்கள். மைக்ரோவேவ் அவன் இல்லாதவர்கள் கேஸ் அடுப்பில் சூட்டுக்கொள்ளலாம்.

அப்பளம் லேசாக ஆறியதும் அதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, துருவிய கேரட் முதலியவற்றை ஒன்றன் பின் ஒன்றாகப் பரப்புங்கள்.

அதன் மேல் தேவையான சாட் மசாலா, உப்பு, சர்க்கரையைத் தூவுங்கள்.

கடைசியில் ஓமப் பொடி, கொத்தமல்லி தூவி அலங்கரியுங்கள்.

சூப்பரான மசாலா பப்பட் சாட் ரெடி.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பும் சாட் இது.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News