சமையல்

குழந்தைகளுக்கு விருப்பமான ஸ்நாக்ஸ் மீன் வடை

Published On 2023-04-29 09:23 GMT   |   Update On 2023-04-29 09:23 GMT
  • மீனை குழம்பு, வறுவல், பிரை என விதவிதமாக சமைத்து சாப்பிட்டிருப்பீர்கள்.
  • இன்று மீனை வைத்து வடை செய்யலாம் வாங்க..

தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள் - 500 கிராம்

முட்டை - 1

உருளைக்கிழங்கு - 100 கிராம்

மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

பச்சைமிளகாய் - 3

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க

செய்முறை

மீனை கழுவி சுத்தம் செய்து வாணலியில் சிறிதளவு நீர்விட்டு வேக வைக்கவும்.

பின்னர் அதை எடுத்து முள், தோல் நீக்கி நன்கு பிசையவும்.

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து நன்கு மசிக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் பொடியாக வெட்டவும்.

ஒரு பாத்திரத்தல் உதிர்த்த மீன், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த் தூள், வெட்டிய வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய், உப்பு, முட்டை எல்லாம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மீன் மசாலாவை சிறுசிறு வடைகளாகத் தட்டிப் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும்.

ருசியான மீன் வடை தயார்.

இதை தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் போல செய்யலாம். சுவை சூப்பராக இருக்கும்.

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News