சமையல்

மழை நேரத்தில் சாப்பிட சூப்பரான மிக்ஸ்டு வெஜிடபிள் போண்டா

Published On 2022-12-26 09:11 GMT   |   Update On 2022-12-26 09:11 GMT
  • மழை நேரத்தில் சூடான காபி, டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
  • காய்கறிகளை சாப்பிடாத குழந்தைகளுக்கு இப்படி செய்துகொடுக்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - சிறியது 1

கேரட் - 1

கோஸ் - 100 கிராம்

பீன்ஸ் - 75 கிராம்

கொத்தமல்லித்தழை - சிறிதளவு,

மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - 250 கிராம்.

மேல்மாவுக்கு:

கடலை மாவு - 150 கிராம்,

அரிசி மாவு - 25 கிராம்,

உப்பு - சிறிதளவு.

செய்முறை:

காய்கறிகளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, நறுக்கிய காய்களை போட்டு நன்கு வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.

இந்தக் கலவையை சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

மேல் மாவுக்கு கொடுத்துள்ளவற்றுடன் நீர் சேர்த்து, தோசை மாவைவிட சற்றே தளர்வாக கரைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் வெஜிடபிள் கலவை உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதை சாஸ் உடன் பரிமாறவும்.

தேங்காய் சட்னி, புதினா சட்னியும் தொட்டுக்கொள்ளலாம்.

Tags:    

Similar News