சமையல்

நாவூற வைக்கும் கிரீன் சிக்கன் கிரேவி

Published On 2024-03-12 07:01 GMT   |   Update On 2024-03-12 07:01 GMT
  • சிக்கனை பலரும் விதவிதமாக சமைத்து ருசித்திருப்பார்கள்.
  • கிரீன் சிக்கன் கிரேவியை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

சிக்கனை பலரும் விதவிதமாக சமைத்து ருசித்திருப்பார்கள். ஆனாலும் கூட 'கிரீன் சிக்கன் கிரேவி'யை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். வித்தியாசமான, அதே நேரம் மிகவும் சுவையான 'கிரீன் சிக்கன் கிரேவி'யை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

சிக்கன் 1/2 கிலோ

எண்ணெய் - 3 ஸ்பூன்

பிரிஞ்சி இலை -2

பட்டை -2

ஏலக்காய் 2

கிராம்பு 2

வெங்காயம் -2

இஞ்சி பூண்டு பேஸ்ட்- ஒரு ஸ்பூன்

பச்சைமிளகாய் 2

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - அரை ஸ்பூன்

கரம் மசாலா- அரை ஸ்பூன்

மல்லித்தூள்- 2 ஸ்பூன்

மிளகாய்த்தூள்- அரை ஸ்பூன்

உப்பு- தேவையான அளவு

கொத்தமல்லி- ஒரு கைப்பிடி

புதினா - ஒரு கைப்பிடி

முந்திரி - 7

பச்சைமிளகாய்-  3-4

தயிர்- ஒரு ஸ்பூன்

மிளகுத்தூள்-1/2 ஸ்பூன்

கசூரி மேத்தி- சிறிதளவு

செய்முறை:

அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து சூடாக்கி, பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, கிராம்பு சேர்த்து வறுக்கவும். பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வரும் அளவுக்கு வதக்க வேண்டும்.

தொடர்ந்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும். அடுத்து அதில் சிக்கன் சேர்த்து நன்கு வதக்கிய பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி மூடி போட்டு மூடி வேக வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லி, புதினா, பச்சைமிளகாய், தயிர், ஊறவைத்த முந்திரிப்பருப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த கலவையை சிக்கனில் சேர்த்து கிளறி நன்கு வே கவைக்க வேண்டும். சிக்கன் வெந்ததும் கடைசியாக அதில் மிளகுத்தூள், கசூரி மெத்தி சேர்த்து கிளறி இறக்கினால், வித்தியாசமான நிறத்துடன், சுவையான கிரீன் சிக்கன் கிரேவி ரெடி. இந்த கிரீன் சிக்கன் கிரேவி, சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி தோசை என அனைத்துக்கும் ருசிகரமான துணையாக இருக்கும்.

Tags:    

Similar News