சப்பாத்திக்கு அருமையான சைடிஷ் முகலாய மஷ்ரூம்
- இதை இட்லி, தோசை, பரோட்டா, சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம்.
- இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்
தேவையான பொருட்கள்
காளான் - 300 கிராம்
தயிர் - 200 மில்லி கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2
உலர்ந்த வெந்தய இலை (கசூரி மேத்தி) - 2 தேக்கரண்டி
நறுக்கிய கொத்தமல்லி தழை - 200 கிராம்
வெங்காயம் - 4
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி
கறி மசாலா பொடி - 1 தேக்கரண்டி
முந்திரி பொடி - 2 தேக்கரண்டி
உலர் தேங்காய் பொடி - 2 தேக்கரண்டி
கசகசா - ½ தேக்கரண்டி
தக்காளி - 2
எண்ணெய் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
2 வெங்காயத்தை பொடிதாக நறுக்கி, வெண்ணெய்யில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
மீதம் உள்ள 2 வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும்.
தக்காளியை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
அகலமான பாத்திரத்தில் சுத்தப்படுத்திய காளான், தயிர், இஞ்சி-பூண்டு விழுது, பொடிதாக நறுக்கிய பச்சை மிளகாய், உலர்ந்த வெந்தய இலை, கொத்தமல்லி தழை, நறுக்கிய வெங்காயம், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கறி மசாலா பொடி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், மிதமான தீயில் பொடிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கசகசா சேர்த்து சிறிது வதக்கவும். பின்பு அதில் முந்திரி பொடி, தேங்காய் பொடி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
இதனுடன் அரைத்த தக்காளி விழுதை சேர்க்கவும்.
நன்றாக வதங்கியதும் அதில் ஊற வைத்த காளான் மசாலாவைக் கொட்டிக் கிளறவும்.
தண்ணீர் சேர்க்காமல் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வேக விடவும்.
பின்பு சிறிது கொத்தமல்லி தழை மற்றும் முந்திரி பொடியை மேலே தூவவும்.
இப்போது சுவையான முகலாய மஷ்ரூம் ரெடி.
இதை இட்லி, தோசை, பரோட்டா அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து பரிமாறலாம்!