குழந்தைகளுக்கு விருப்பமான முறுக்கு காய்கறி சாட்
- குழந்தைகளுக்கு பள்ளிக்கு இந்த ரெசிபியை கொடுத்தனுப்பலாம்.
- இந்த சாட் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முறுக்கு - தேவையான அளவு
கேரட் - 1
பீட்ரூட் - 1
வெங்காயம் - 1
எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை - 1 கட்டு
தேங்காய் - 1 துண்டு
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், கேரட், பீட்ரூட் ஆகியவற்றை பொடிதாக நறுக்கிக்கொள்ளவும்.
அவற்றுடன் எலுமிச்சம் பழச்சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இந்த கலவையை அரை மணி நேரத்துக்கு அப்படியே மூடி வைக்கவும்.
ஒரு மிக்சி ஜாரில் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், தேங்காய், பொட்டுக்கடலை, உப்பு ஆகியவற்றை போட்டு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக சட்னி பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் முறுக்கை பொடியாக நொறுக்கிப் போடவும்.
அதனுடன் 2 தேக்கரண்டி சாலட் கலவை (கலந்து வைத்த காய்கறி), 1 தேக்கரண்டி சட்னி சேர்த்து நன்றாகக் கிளறினால் சுவையான 'முறுக்கு காய்கறி சாட் ' ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health