சமையல்

சூடான மைசூர் போண்டா செய்யலாமா?

Published On 2022-12-15 05:40 GMT   |   Update On 2022-12-15 05:40 GMT
  • மாலையில் டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
  • இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்

கறிவேப்பிலை - சிறிது

பச்சை மிளகாய் - 3

மிளகு - 1 டீஸ்பூன்

தேங்காய் - விருப்பத்திற்கேற்ப

அரிசி மாவு - 2 டீஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

ப.மிளகாய், கறிவேப்பிலை, தேங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

உளுத்தம் பருப்பை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்து நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்கு மென்மையாகவும், ஓரளவு கெட்டியாகவும் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் அரிசி மாவு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, மிளகு, தேங்காய் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் நெருப்பை மிதமாக வைத்து, பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக எடுத்து போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப்போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுத்தால், சுவையான மைசூர் போண்டா ரெடி!!!

Tags:    

Similar News