சமையல்

ஊட்டச்சத்து நிறைந்த பாசிபயறு லட்டு

Published On 2023-08-16 08:45 GMT   |   Update On 2023-08-16 08:45 GMT
  • பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
  • சத்தான ஊட்டச்சத்து நிறைந்தது, அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்:-

பாசி பயறு - 200 கிராம்

நாட்டுச்சர்க்கரை 250 கிராம்

வேர்கடலை - 100 கிராம்

ஏலக்காய் - 4 நம்பர்

உப்பு -ஒரு சிட்டிகை

நெய் - 3 கரண்டி

செய்முறை:-

ஒரு பாத்திரத்தில் பாசிபயறு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு கடாயில் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். நன்றாக மனம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்து எடுத்துள்ள பாசிபயறு மாவு கலவையை ஒரு வானொலியில் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மிக்சி ஜாரில் 250 கிராம் நாட்டு சர்க்கரை, 4 நம்பர் ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அரைத்து தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதே மிக்சி ஜாரில் 100 கிராம் வறுத்த வேர்கடலையையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

வறுத்த பாசிபயறு மாவு கலவையுடன், வறுத்த வேர்கடலை பொடி, பொடித்த நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதனுடன் காய்ச்சிய 3 கரண்டி நெய் சேர்த்து கிளர வேண்டும். இதனை நன்றாக பிசைந்து உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும். ஊட்டச்சத்து நிறைந்த பாசிபயறு லட்டு தயார். https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News