சத்தான சுவையான பாசிப்பயறு கருப்பட்டிக் கஞ்சி
- குழந்தைகளுக்கு சத்தான ரெசிபிகளை செய்து கொடுப்பது உடலுக்கு நல்லது.
- பாசிப்பயறில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
பாசிப்பயறு - அரை கப்
கருப்பட்டி - 300 கிராம்
சுக்குத்தூள் - அரை டீஸ்பூன்
ஏலக்காய் - 3
உப்பு - கால் டீஸ்பூன்
செய்முறை:
பாசிப்பயறை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து தேவையான அளவு தண்ணீர் விட்டு வேகவைக்கவும்.
வெந்ததில் பாதியை எடுத்து தண்ணீர் வடித்து மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
கருப்பட்டியைத் தூளாக்கி கனமான அடிப்பகுதியுள்ள வாணலியில் சேர்த்து 300 மில்லி தண்ணீர் விட்டுக் காய்ச்சவும். கருப்பட்டி கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.
வடிக்கட்டிய கருப்பட்டி சிரப்பை மீண்டும் அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். இத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதில் வேகவைத்து அரைத்த பயறுக் கலவையைச் சேர்த்து நன்கு கலக்கவும். தேவையெனில், சிறிது தண்ணீர் ஊற்றி, கஞ்சி பதத்துக்குக் கொண்டு வரவும்.
4 நிமிடங்களுக்கு மிதமான தீயில் வைத்து உப்பு சேர்த்துக் கஞ்சியைக் கொதிக்க விடவும்.
அடுத்து அதில் வெந்த பயறைச் சேர்த்துக் கலந்து இரண்டு நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கினால், சுவையான கருப்பட்டிக் கஞ்சி தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health