கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் பச்சை பயறு சட்னி
- உடலில் கெட்ட கொழுப்புகள் படிவதை தடை செய்கிறது.
- பாசி பயறை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
தேங்காய் - 2 துண்டு
புளி - நெல்லிக்காய் அளவு
பூண்டு - 2 பல்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வர மிளகாய் - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
எண்ணெய் - தாளிக்க
செய்முறை
பச்சை பயிறை நன்கு சுத்தம் செய்து, நீரில் 3-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், வரமிளகாய் சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் போட்டு, அத்துடன் பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
பிறகு அதனுடன் ஊற வைத்துள்ள பச்சை பயிறை போட்டு அதனுடன் பூண்டு, புளி, தேங்காய் சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.
பின் அதில் எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளித்து சட்னியில் சேர்க்கவும்.
இப்போது சூப்பரான பச்சை பயறு சட்னி ரெடி!!!