கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற பாலக்கீரை தொக்கு
- கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது.
- பாலக்கீரை தொக்கை சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிட கொடுத்தால் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
பாலக்கீரையில் இரும்புச்சத்து, பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், கால்சியம் போன்றவை இதில் அடங்கியுள்ளன. பாலக்கீரையில்போலிக் அமிலம் அதிகளவில் உள்ளதால் கர்ப்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.
குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்களும் இதனை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்க உதவுகிறது. பாலக்கீரையில் மெக்னீசியம், காப்பர் மற்றும் வைட்டமின் கே அதிகளவில் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக உதவுகிறது.
இக்கீரை இரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்வதால் அனிமீயா நோய் வராமல் இருக்க உதவுகிறது. பாலக்கீரை தொக்கை எப்படி எளிமை செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பாலக்கீரை - 2 கட்டு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 1 முழு அளவு
தனி மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - தேவையான அளவு
கடலை பருப்பு - 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
வரமிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
கருவேப்பிளை - ஒரு கொத்து
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் பாலக்கீரையை நன்கு பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் பெரிய வெங்காயம், பூண்டு, தனி மிளகாய் தூள் இவை மூன்றையும் ஒரு மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் அடிகனமாக ஒரு பத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கறிவேப்பிளை ஆகியவற்றை சேர்ந்து தாளிக்கவும்.
அதன்பின் அரைத்து வைத்திருந்த கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கவும், பின்னர் இதனுடன் மஞ்சள் தூள் சிதளவும், உப்பு தேவையான அளவு சேர்க்கவும், பின்னர் நறுக்கி வைத்திருந்த பாலக்கீரையை அதனுடன் சேர்ந்து நன்கு கிளரவும்.
5 நிமிடங்களுக்கு பின்னர் பாலக்கீரையின் நிறம் கரும் பச்சையாக மாறும். அதன் பின்னர் பாலக்கீரை தொக்கை பரிமாறலாம்.
இந்த பாலக்கீரை தொக்கை சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு வைத்து சாப்பிட கொடுத்தால் குடும்பத்தினர் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.