சித்திரை விஷு ஸ்பெஷல்: பாலடை பிரதமன்
- கேரளாவில் எந்த விசேஷம் என்றாலும் பாலடை பிரதமன் கண்டிப்பாக இருக்கும்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - ஒரு கப்
பால் - ஒன்றரை லிட்டர்
சர்க்கரை - ஒரு கப் (இனிப்பு விரும்புபவர்கள் தேவைக்கு ஏற்ப அதிகம் சேர்க்கலாம்)
தேங்காய் எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வாழையிலை - 4
செய்முறை
பச்சரிசியை நன்றாக கழுவி ஒன்றரை மணி நேரம் ஊற வைத்து, பின் ஒரு துணியில் பரப்பி உலற வைக்கவும். அரிசியில் ஈரம் இல்லாமல் இருக்கும் போது எடுத்து மிக்ஸியில் நைசாக பொடிக்கவும். பொடித்த அரிசியை நன்கு சலித்து எடுத்துக் கொள்ளவும்....
சலித்த மாவில் சிறிது தண்ணீரும், தேங்காய் எண்ணெயும் கலந்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும். கலந்த மாவை வாழையிலையில் பரவலாக கரண்டியால் ஊற்றவும். வாழையிலையை சுருட்டி நூலால் கட்டவும். கொதிக்கும் தண்ணீரில் அமிழ்த்தி 30 நிமிடம் வைத்து வேக விடவும்.
அவை வேகும் சமயத்தில் ஒரு அகண்ட பாத்திரத்தில் பாலை காய்க்கவும். பால் பாதியாக சுண்டியதும் முக்கால் கப் சர்க்கரை சேர்த்து கிளறவும். பால் லேசாக நிறம் மாறி இருக்கும்.
அந்த சமயத்தில் வாழையிலைகளை வெளியில் எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு வாழையிலைகளைப் பிரிக்கவும். கிடைக்கும் அடைகளை நன்றாக நீரில் அலசி பொடிபொடியாக கொத்தி வைத்து கொள்ளவும்.
கொத்திய அடைகளை சுண்டிய பாலில் சேர்த்து கிளறவும். 10 நிமிடங்கள் கழித்து இறக்கவும். இறக்கும் போது சற்று தளர்வாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆறியதும் சரியான பக்குவத்தில் இருக்கும்.
இப்போது தித்திக்கும் பாலடை பிரதமன் ரெடி....