சமையல்

வீட்டிலேயே செய்யலாம் பன்னீர் பட்டர் மசாலா

Published On 2023-06-17 05:56 GMT   |   Update On 2023-06-17 05:56 GMT
  • பன்னீரில் அதிகம் கால்சியம் இருப்பதால் பற்கள், எலும்புகளை வலுவாக்க உதவும்.
  • பன்னீரில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது.

தேவையான பொருட்கள் :

பன்னீர் - 200 கிராம்,

பெரிய வெங்காயம் -3,

தக்காளி - 4,

இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,

மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்,

தனியா தூள் - 1 டீஸ்பூன்,

கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்,

வெண்ணெய் - 50 கிராம்,

ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்

காய்ந்த வெந்தயக் கீரை - 2 டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பன்னீரை சிறு துண்டுளாக வெட்டிக்கொள்ளவும்.

வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து கொள்ளவும்.

வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை 'ஸிம்'மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள்.

கடைசியாக, பன்னீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள்.

ஃப்ரெஷ் கிரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.

குழந்தைகள் விரும்பும் சத்தான சைடிஷ், இந்த பன்னீர் பட்டர் மசாலா!

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News