- உடல் பருமனைக் குறைக்க பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
- கொத்தமல்லி வயிற்றில் ஏற்படும் தொல்லைகளுக்கு தீர்வு தரும்.
தேவையான பொருட்கள் :
பச்சைப் பயறு - 100 கிராம்
பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
சீரகம் - 2 சிட்டிகை
பச்சை மிளகாய் - ஒன்று
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப் பயறு, பச்சரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
ஊறவைத்த அரிசி, பயிருடன் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை தோசை மாவைக் காட்டிலும் சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்துக் கரைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.
இப்போது சத்தான சுவையான பச்சைப் பயறு கொத்தமல்லி பெசரட் ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health