வாங்க செய்யலாம்...இறால் தேங்காய் பால் புலாவ்...
- இறாலை காரம் இல்லாமல் சுவையாக கொடுத்தால் சொல்லவா வேண்டும்.
- குழந்தைகள் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
அசைவ உணவில் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது இறால். அந்த இறாலை காரம் இல்லாமல் சுவையாக கொடுத்தால் சொல்லவா வேண்டும். வாங்க எப்படி செய்யலாம்னு பார்ப்போம்...
தேவையான பொருட்கள்:
இறால் - 1/2 கிலோ
பிரியாணி அரிசி - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம்
கொத்தமல்லி - 1கை
புதினா - 1 கை
தேங்காய் பால் - 1 கப்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தேவையான அளவு
எண்ணெய் - 100 மில்லி
நெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் இறாலையும், அரிசியும் கழுவி சுத்தம் செய்து வைக்கவும். பிறகு குக்கரில் எண்ணெய்,நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.பின்பு அதில் பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்க்கவும்.
பின்பு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும் அதில் பின்பு மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளியும் சேர்த்து வதக்கி அதில் இறால் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்பு இறால் தண்ணீர் விட ஆரம்பித்ததும் அதில் பச்சை மிளகாய் கொத்தமல்லி புதினா தூவி கிளறி அதில் ஒரு கப் திக்கான தேங்காய் பால், 2 கப் தண்ணீர் ஊற்றவும். பின்னர் இவை அனைத்து நன்கு கொதித்தவுடன் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த அரிசியை போட்டு 2 விசில் விட்டு இறக்கவும்.
சுவையான இறால் தேங்காய் பால் புலாவ் ரெடி. குழந்தைகள் கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.