சமையல்

சாம்பார் சாதத்திற்கு சூப்பரான இறால் பொடிமாஸ்

Published On 2023-07-24 09:31 GMT   |   Update On 2023-07-24 09:31 GMT
  • குழந்தைகளுக்கு இறால் என்றால் மிகவும் பிடிக்கும்.
  • இன்று இறால், முட்டை சேர்த்து பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இறால் - 200 கிராம்

முட்டை - 2

வெங்காயம் - 2,

இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 1/2 ஸ்பூன்,

மஞ்சள் தூள் - சிறிது,

உப்பு - 1/2 ஸ்பூன்,

வெங்காயத்தாள் - சிறிதளவு

மிளகு தூள் - கால் டீஸ்பூன்

மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்,

கரம்மசாலா தூள் - கால் டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

இறாலை சுத்தம் செய்து சிறிது மிளகாய் தூள், உப்பு, இஞ்சி, பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்து தோசை கல்லையில் போட்டு வறுத்து கொள்ளவும். வறுத்த இறாலை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வெங்காயத்தாள், வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், வெங்காயத்தாள் போட்டு வதக்கவும்.

வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், கரம்மசாலா தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.

முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வந்ததும் பொடியாக நறுக்கி இறால், வெங்காயத்தாள், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான இறால் பொடிமாஸ் ரெடி.

லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News