15 நிமிடத்தில் செய்யலாம் ராகி முட்டை நூடுல்ஸ்
- கேழ்வரகில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று ராகி முட்டை நூடுல்ஸ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ராகி நூடுல்ஸ் - இரண்டு கப்
முட்டை - 3
நீளமாக நறுக்கிய குடைமிளகாய் (சிவப்பு, மஞ்சள், பச்சை) - ஒரு கப்
வெங்காயம் - 2
பூண்டு - 2 பல்
வீட்டில் செய்த இனிப்பு தக்காளி சட்னி - தேவையான அளவு
மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
செய்முறை:
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கடாயில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை உடைத்து ஊற்றி உப்பு, மிளகு தூள் சேர்த்து உதிரியாக பொரித்து வைக்கவும்.
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சிறிதளவு உப்பு, அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துக் கலந்து அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும். கொதிக்கும்போது ராகி நூடுல்ஸ் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வேகவிடவும். பின்னர் எடுத்து, வடிகட்டி உடனே குளிர்ந்த நீரை ஊற்றி அலசி, தண்ணீர் வடியும் வரை தனியே வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து வெண்ணெய், எண்ணெய் ஊற்றி, சூடானதும் பூண்டை நசுக்கி அதில் சேர்த்து வதக்கவும்.
பின்னர் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் இனிப்பு தக்காளி சட்னி சேர்த்து வதக்கவும்.
பாதி வெந்ததும் உப்பு சேர்த்துக் கிளறிவிட்டு, நூடுல்ஸ் சேர்த்து நன்றாக வதக்கவும்.
இறுதியில் பொரித்த முட்டை, மிளகுத்தூள் தூவி நன்றாக கலந்து இறக்கி, லஞ்ச் பாக்ஸில் `பேக்' செய்யவும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health