கால்சியம் நிறைந்த கேழ்வரகு மசாலா இட்லி
- கேழ்வரகில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது.
- கேழ்வரகில் கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு - நான்கு கப்
உளுந்து - முக்கால் கப் ,
குடைமிளகாய் - 1,
ப.மிளகாய் - 3
கேரட் - 1,
வெங்காயம் - 1,
இஞ்சி - சிறிய துண்டு,
பச்சைப் பட்டாணி - கால் கப்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை - தேவையான அளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க
கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - மூன்று ,
கறிவேப்பிலை - சிறிதளவு,
செய்முறை :
வெங்காயம், ப.மிளகாய், குடைமிளகாய், கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கேரட்டை துருவிக்கொள்ளவும்.
பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
கேழ்வரகு மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு கெட்டியாகக் கரைத்து வையுங்கள்.
உளுந்தை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைத்து நன்றாக அரைத்து கேழ்வரகு மாவில் சேர்த்து உப்பு போட்டு இட்லி மாவு பதத்தில் முதல் நாள் இரவே கரைத்து வையுங்கள். மறுநாள் நன்றாகப் பொங்கி விட்டிருக்கும். இந்த மாவை இட்லித் தட்டில் ஊற்றி 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து இட்லிகளை ஆற வைத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வையுங்கள்.
கடாயில் எண்ணெய் சேர்த்துக் கடுகு, பெருங்காயம், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் குடைமிளகாய், கேரட் துருவல், வேகவைத்த பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
பிறகு கொஞ்சம் உப்பு சேர்த்து வெட்டி வைத்த இட்லித் துண்டுகளைப் போட்டு நன்றாகப் புரட்டி யெடுங்கள்.
கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி இறக்குங்கள்.
இப்போது சூப்பரான கேழ்வரகு மசாலா இட்லி ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health