விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: கேழ்வரகு பூரண கொழுக்கட்டை
- கேழ்வரகில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- இந்த கொழுக்கட்டையை சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
மேல் மாவிற்கு...
கேழ்வரகு மாவு - 250 கிராம்,
தண்ணீர் - 1/2 லிட்டர்,
எண்ணெய் - 50 மி.லி.,
உப்பு - 20 கிராம்.
பூரணத்திற்கு...
எள் - 100 கிராம் (பொடிக்கவும்),
கருப்பட்டி - 200 கிராம்,
முழு தேங்காய் - 2 (துருவியது),
நெய் - 10 கிராம், ஏலக்காய் - 25 கிராம் (பொடிக்கவும்).
செய்முறை
மாவிற்கு...
மிதமான சூட்டில் கடாயில் கேழ்வரகு மாவை கொட்டி வாசனை வரும்வரை வறுக்கவும். வறுத்த மாவு ஆறியதும் உப்பு, வெந்நீர், எண்ணெய் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்தில் நன்கு பிசைந்து கொள்ளவும்.
பூரணத்திற்கு...
அடுப்பில் கடாயை வைத்து பொடித்த எள், தேங்காய்த்துருவல், நெய், ஏலக்காய்த்தூள், கருப்பட்டியை சேர்த்து கிளறி இறக்கவும். மாவிலிருந்து சிறு உருண்டை எடுத்து உள்ளே பூரணத்தை வைத்து வேண்டிய வடிவத்தில் செய்து வைக்கவும்.
இவ்வாறு செய்த கொழுக்கட்டைகளை இட்லி பானையில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்து பரிமாறவும்.
இப்போது சூப்பரான கேழ்வரகு பூரண கொழுக்கட்டை ரெடி.