- குழந்தைகளுக்கு பூரி என்றால் மிகவும் பிடிக்கும்.
- இன்று கேழ்வரகில் பூரி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்:
கேழ்வரகு மாவு - 1/2 கப்,
கோதுமை மாவு - 1/2 கப்,
ஓமம் - சிறிதளவு,
எண்ணெய் - 1 மேஜைக்கரண்டி,
லேசாக சூடு படுத்திய தண்ணீர் - 1/2 கப்,
உப்பு - தேவையான அளவு,
ண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவு,கோதுமை மாவு, ஒரு மேஜைக்கரண்டி எண்ணெய், உப்பு, ஓமம் சேர்த்து நன்றாக கலந்து அதில் சிறிது சிறிதாக லேசாக சூடு படுத்திய தண்ணீரை ஊற்றி சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஒரு தடவை பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பூரிக்கட்டையில் வைத்து வட்டமாக தேய்த்து வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தேய்த்து வைத்த பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு இருபுறமும் பொன்னிறமானவுடன் எடுத்து விடவும்.
இப்போது சுவையான கேழ்வரகு பூரி ரெடி.