அரைமணி நேரத்தில் செய்யலாம் சத்தான சிவப்பு அவல் புட்டு...
- சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- அதிக சத்துக்கள் நிறைந்த இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுபலம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - 2 கப்
கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - முக்கால் கப்
தேங்காய் துருவல் - முக்கால் கப்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
செய்முறை
சிவப்பு அவலை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துகொள்ளவும்.
2 கப் தண்ணீரை நன்றாக கொதிக்கவிடவும்.
பொடித்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கொதிக்க வைத்த நீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இப்போது அவல் நன்றாக ஊறி இருக்கும்.
அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
அடுத்து இட்லி தட்டில் ஊறவைத்த சிவப்பு அவலை பரப்பி விட்டு 7 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்.
வேக வைத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு (அவல் சூடாக இருக்கும் போதே) அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
இப்போது சத்தான சுவையான சிவப்பு அவல் புட்டு ரெடி.