null
சத்தான காலை டிபன் சிவப்பரிசி காரப்பணியாரம்
- இதை டிபனாகவும், ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.
- சிவப்பரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள் :
சிவப்பு அரிசி - ஒரு கப்,
உளுந்து - அரை கப்,
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்,
வெங்காயம் - ஒன்று,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை, தேங்காய் துருவல் - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
சிவப்பு அரிசியை தனியாகவும், உளுந்து - வெந்தயத்தை தனியாகவும் 3 மணிநேரம் ஊறவிடவும்.
நன்றாக ஊறியதும் இரண்டையும் அரைத்து தேவையான உப்பு சேர்த்துக் கலக்கி, 4 மணி நேரம் புளிக்கவிடவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல் போட்டு தாளித்த பின்னர் பச்சை மிளகாய், வெங்காயம், தேங்காய் துருவல் சேர்த்து வதக்கி, மாவில் சேர்க்கவும்.
குழிப்பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, மாவை குழிகளில் ஊற்றி வேகவிடவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.
இப்போது சூப்பரான சிவப்பு அரிசி காரப் பணியாரம் ரெடி.