சமையல்

சில நிமிடத்தில் செய்யலாம் அரிசி மாவு போண்டா

Published On 2024-07-06 10:54 GMT   |   Update On 2024-07-06 10:54 GMT
  • கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • போண்டா பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து விடவும்.

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிகவும் சுவையான கிரிஸ்பியான போண்டா எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்:

அரிசி மாவு - 2 கப்

சீரகம் - 1 ஸ்பூன்

பூண்டு - 5 பல்

இஞ்சி - 1 துண்டு

வேர்கடலை - 50 கிராம்

பச்சைமிளகாய் - 3

வெங்காயம் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

தயிர் - 1 கப்

எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

• ஒரு மிக்ஸியில் சீரகம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், வேர்கடலை ஆகியவற்றை சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போடவும்.

• இதனுடன் அரைத்து வைத்திருந்த பொருட்களை போட்டு கைகளால் நன்கு பிசையவும்.

• பின்னர் வெங்காயம், தயிர், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு போண்டா பதத்திற்கு பிசைந்து எடுத்து வைக்கவும்.

• ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும்.

• எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் தயாரித்து வைத்திருந்த போண்டாவை எடுத்து சிறு சிறு உருண்டையாக கில்லி போடவும்.

• அடுப்பை மீடியம் தீயில் வைத்து சமைக்கவும்.

• போண்டா பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து விடவும்.

• இதோ கிரிஸ்பியான அரிசி மாவு போண்டா ரெடி.

• இதனுடன் நீங்கள் விருப்பப்பட்ட சட்னி, அல்லது சாஸ் வைத்து சாப்பிடலாம்.

Tags:    

Similar News