சூப்பரான நத்தை வறுவல் செய்யலாம் வாங்க...
- கிராமப்புறங்களில் நந்தை கறி சாப்பிடுவது வழக்கம்.
- நத்தை கறி சுவையானது, ஆரோக்கியமானது.
தேவையான பொருட்கள்
நத்தை - அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
ப.மிளகாய் - 3
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,
கரம் மசாலா - அரை டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - தேவையான அளவு,
தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
வயல்களில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டு வைத்தால் போதும் நத்தை இறந்து விடும். பிறகு ஓடுகளை உடைத்து நத்தையின் கறியை தனியாகப் பிரித்தெடுத்து நல்ல தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்கு அலசி கொள்ள வேண்டும்.
வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளியை சேர்த்து தக்காளி குழைய வதக்கவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு கிளறவும்.
அடுத்து நத்தை கறியினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
நத்தை கறியின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் விட்டு கறியை நன்கு வேக விடவும்.
அடுத்து அதில் தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.
கறி நன்கு வெந்து ஓரங்களில் எண்ணெய் பிரிந்து தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இப்போது நத்தை கறி பரிமாறத் தயார்.