சமையல்

காரசாரமான கனவா மீன் மசாலா

Published On 2023-06-15 09:26 GMT   |   Update On 2023-06-15 09:26 GMT
  • சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.
  • தோசை, சப்பாத்திக்கும் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்

கனவா மீன் - அரை கிலோ

வெங்காயம் - 1 சிறியது

சின்ன வெங்காயம் - 10

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 1

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

சீரக தூள் - அரை தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம்

கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு, தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

* வெங்காயம், சின்ன வெங்காயம், ப.மிளகாய், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* கனவா மீனை கழுவி சுத்தம் செய்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்..

* கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் சற்று வதங்கியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கி, பின்பு அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள், தனியா தூள், மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும்.

* பின்பு கால் கப் தண்ணீர் ஊற்றி மசாலாவில் பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும்.

* அடுத்து ஊறவைத்த கனவா மீனை சேர்த்து கலந்துவிடவும்.

* பின்பு கரம் மசாலா தூள் சேர்த்து கலந்து 10 நிமிடம் வேகவிடவும்.

* கடைசியாக கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் எலுமிச்சைபழச்சாறு சேர்த்து கலந்து இறக்கவும்.

* கனவா மீன் மசாலா தயார்!

ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

Tags:    

Similar News