சமையல்

மழைக்கு சூடா மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி சாப்பிடலாம் வாங்க...

Published On 2022-11-02 09:21 GMT   |   Update On 2022-11-02 09:21 GMT
  • மழைக்காலத்தில் சுடச்சுட ஸ்நாக்ஸ் சாப்பிட பிடிக்கும்.
  • இன்று சுடச்சுட மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி செய்யலாம் வாங்க....

தேவையான பொருட்கள் :

கடலை மாவு - 1 கப்

பஜ்ஜி மிளகாய் - 6

வெங்காயம் - 2

வரமிளகாய் - 2

புளி - சிறிது

பூண்டு - 4 பல்

அரிசி மாவு - 1/2 கப்

மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

சோடா உப்பு - 1 சிட்டிகை

பெருங்காயத் தூள் - சிறிது

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை :

* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மிளகாயை இரண்டாக கீறி விதையை எடுத்து விடவும்.

* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், சோடா உப்பு, பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், வரமிளகாய், புளி, பூண்டு மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அரைத்த கலவையை கீறிய மிளகாய்களின் நடுவில் வைக்கவும்.

* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி, எண்ணெயை சூடானதும் இதில் மசாலா பிரட்டிய மிளகாயை பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

* இதேப்போல் அனைத்து மிளகாயையும் செய்ய வேண்டும்.

* இப்போது சூப்பரான மசாலா ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி ரெடி!!!

Tags:    

Similar News