வீட்டிலேயே தயார் செய்யலாம்... வெயிலுக்கு இதமான தர்பூசணி ஐஸ்கிரீம்...
- வெயிலுக்கு இதமாக என்ன செய்வதென்று தாய்மார்களின் மிக பெரிய கவலையாகவும் உள்ளது.
- செலவில்லாமலும் மிகவும் எளிமையாக செய்யக் கூடியது இந்த ஐஸ்கிரீம்.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றில் இருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களை பாதுகாப்பது வீட்டில் உள்ளவர்களுக்கு சவாலாக இருக்கிறது. பள்ளிகள் விடுமுறை என்பதால் பிள்ளைகளுக்கு வெயிலுக்கு இதமாக என்ன செய்வதென்று தாய்மார்களின் மிக பெரிய கவலையாகவும் உள்ளது. வீட்டிலேயே குறைந்த செலவில் ஐஸ்கிரீம் கிடைந்ததால் எப்படி இருக்கும். அதைதான் நான் இப்போது சொல்ல போகிறேன். வாங்க அனைவரும் ஜில் என்று ஆகலாம்.
தேவையான பொருட்கள்:
தர்பூசணி - 1
கிரீம் மில்க் - 750 ml
சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை:
* ஒரு முழு தர்பூசணி பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.
* நறுக்கிய தர்பூசணி துண்டுகளை கரண்டி கொண்டு நன்கு நசுக்கி சாறு எடுக்க வேண்டும். (குறிப்பாக மிக்ஸியில் அரைக்கக் கூடாது)
* பின்னர் அந்த சாரை ஒரு அடி கனமான பாத்திரத்தில் மாற்றில் அதை அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடு செய்ய வேண்டும்.
* அந்த சாரானது ஒரு திக்கான கலவையாக வந்த உடன் அடுப்பை அனைத்து விட வேண்டும். (குறிப்பாக 1 டம்ளர் சாறு அரை டம்ளர் வந்தவுடன்)
* அடுத்ததாக கிரீம் மில்க்கை ஒரு பாத்திரத்தில் ஊற்றி ஹாண்டு மிக்சரை வைத்து அதை நன்கு மிக்ஸ் செய்து ஒரு திக்காக கிரீம் பதத்திற்கு கொண்டு வரவேண்டும். அதனுடன் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து மீண்டும் நன்கு மிக்ஸ் செய்யவேண்டும்.
* சர்க்கரையும், மில்க் கிரீமும் நன்கு ஒன்று சேர்ந்தவுடன் தயாரித்து வைத்துள்ள தர்பூசணி திரவத்தை அதனுடன் சேர்த்து, பின்னர் அனைத்தையும் நன்கு மிக்ஸ் செய்து ஒரு நல்ல கிரீம் பதத்திற்கு கொண்டு வரவேண்டும்.
* பின்னர் இதை ஒரு கண்ணாடி பவுல் அல்லது வேறு ஏதாவது ஒரு பாத்திரத்தில் மாற்றி, ஃப்ரிசரில் 4 முதல் 5 மணி நேரம் வைக்க வேண்டும்.
5 மணிநேரம் கழித்து எடுத்து பரிமாறினால் சுவையான ஐஸ்கிரிம் ரெடி. இந்த வெயிலுக்கு குடும்பமாக செலவில்லாமலும் மிகவும் எளிமையாக செய்யக் கூடியது இந்த ஐஸ்கிரீம்.