சமையல்

சூப்பரான நெய் பிஸ்கட்

Published On 2023-08-16 08:22 GMT   |   Update On 2023-08-16 08:22 GMT
  • எளிமையான முறையில் வீட்டிலேயே செய்யும் நெய் பிஸ்கட்.
  • ஓவன் இல்லாமல் வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்.

தேவையான பொருட்கள்:-

நெய் - ஒரு கப்

கோதுமை மாவு-ஒரு கப்

நாட்டு சர்க்கரை - ஒரு கப்

உப்பு -ஒரு சிட்டிகை

ஏலக்காய் - 4 நம்பர்

செய்முறை:-

ஒரு மிக்சி ஜாரில் ஒரு கப் நாட்டு சர்க்கரை, 4 ஏலக்காய், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு பெரிய வாய் அகன்ற பாத்திரத்தில் ஒரு கப் நெய் சேர்த்து அதனை நன்றாக அடித்து கலக்கி வைத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதனுடன் பொடித்த நாட்டு சர்க்கரை கலவையை அதனுடன் சேர்க்க வேண்டும். அதனையும் நன்றாக கலக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.நிறைய நேரம் கிளர வேண்டாம்.

அடித்து வைத்த கலவையுடன் ஒரு கப் கோதுமை மாவை கட்டி இல்லாமல் சலித்து சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த மாவு கலவையை நன்றாக பிசைந்து உருண்டைகளாக்கி அதனை ஒரு தட்டில் வைத்து, அதனை பிஸ்கட் வடிவத்திற்கு உருட்டி தட்டையாக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இதையடுத்து ஒரு அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து அதனுள் ஒரு ஸ்டாண்ட் வைத்து மூடி அதனை 5 நிமிடம் ஃப்ரீஹீட் செய்ய வேண்டும். பின்னர் நாம் தயார் செய்து வைத்த பிஸ்கட்களை ஒரு தட்டில் வைத்து அதனுள் வைத்து 10-ல் இருந்து 15 நிமிடத்திற்கு பேக் செய்து எடுத்துக்கொள்ளவும். நெய் பிஸ்கட் தயார். சூடு ஆறியதும் பரிமாறலாம்.

இந்த நெய் பிஸ்கட் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி விட்டு வீட்டுக்கும் வந்ததும் கொடுக்கலாம். செய்து பாருங்கள். https://www.maalaimalar.com/health


Tags:    

Similar News