null
வீட்டிலேயே டீக்கடை வெங்காய போண்டா செய்யலாம் வாங்க...
- இந்த போண்டாவை டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
- இந்த போண்டா செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3
சோம்பு - 1 ஸ்பூன்
தனி மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலை மாவு - 4 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு இதனுடன் உப்பு, மிளகாய் தூள், ப.மிளகாய், கறிவேப்பிலை, சோம்பு போட்டு நன்றாக கலந்து இந்த கலவையை 10 நிமிடம் மூடி வைக்கவும்.
10 நிமிடம் கழித்து பார்த்தால் வெங்காயம் மிருதுவாகி இருக்கும். இப்போது மைதா மாவு, கடலை மாவு, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உங்களுக்கு பிடித்த வடிவில் உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் டீக்கடை வெங்காய போண்டா ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health