சமையல்

இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

Published On 2023-09-24 07:18 GMT   |   Update On 2023-09-24 07:18 GMT
  • சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் மாறாமல் இருக்கும்.
  • முட்டை கெட்டுப்போகாமல் இருக்க லேசாக எண்ணெய் தடவி வைக்கலாம்.

* சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது அதில் கொஞ்சம் மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.

* பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.

* வெண்டைக்காயை எண்ணெய்யில் வதக்க வேண்டும். அப்படி செய்தால் அதில் இருக்கும் பிசுபிசுப்பு தன்மை நீங்கி விடும். அதன் பின்பு குழம்பில் சேர்த்தால் வழுவழுப்பு இருக்காது. குழம்பும் ருசியாக இருக்கும்.

* சப்பாத்தி மாவு மீது எண்ணெய் தடவி பிரிட்ஜில் வைத்தால் மாவு நிறம் கெடாமல் இருக்கும்.

* முட்டையை வேக வைக்கும் பொழுது சில துளிகள் கடலை எண்ணெய், கல் உப்பு சேர்த்தால் எளிதில் வேகும்.

* கொதிக்கும் தண்ணீரை ஊற்றி பாதாமை ஊற வைத்தால் அதன் தோல் எளிதாக உரிந்து வரும்.

* ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

* இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும், பொன்னிறமாகவும் இருக்கும்.

* மழைக்காலங்களில் உப்பில் நீர் சேராமல் இருக்க, பிளாஸ்டிக் சீட் மீது உப்பை கொட்டி, காற்றுபுகாதவாறு கட்டி வைத்தால் போதும்.

* புளி குழம்பு தயாரிக்கும்போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.

* முட்டை கெட்டுப் போகாமல் இருக்க அதன் மீது லேசாக எண்ணெய் தடவி வைக்கலாம்.

* முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கி காற்று புகாத கவர் அல்லது டப்பாவில் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வாடாமல் அப்படியே இருக்கும்.

* வாழைப்பூ சுத்தம் செய்யும்போது கையில் சிறிது நல்லெண்ணெய் தடவிக் கொண்டால் கையில் கறை ஒட்டாது.

* காரக்குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் போதும். காரத்தின் வீரியம் குறைந்துவிடும்.

* சோறு ஒட்டாமலும் உதிரியாகவும் இருக்க, அரிசி ஊற வைக்கும்போது சில ஐஸ் கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.

* கறிவேப்பிலை வாடாமலும், நிறம் மாறாமலும் இருக்க, தண்ணீரில் அலசி உலர வைத்து, பின்னர் காற்று புகாத டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாள் வரை கெட்டுப் போகாது.

* மெதுவடை மொறு மொறு வென்று இருக்க, உளுத்தம் பருப்புடன் கொஞ்சம் பச்சரிசி சேர்த்து ஊற வைத்து அரைத்தால் நன்றாக இருக்கும்.

* கீரை சமைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறம் மாறாது.

* பருப்பு வேக வைக்கும்போது நெய் சேர்த்து சமைத்தால் சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும்.

* வீட்டில் எறும்பு புற்று இருந்தால் அங்கு கொஞ்சம் பெருங்காயத்தூளை தூவி விட்டால் எறும்புத்தொல்லை இருக்காது.

* துண்களில் எண்ணெய் கறையோ கிரீஸ் கறையோ பட்டுவிட்டால் அதில் சிறிதளவு நீலகிரித்தைலம் விட்டு கழுவினால் அந்த கறை போய்விடும்.

* ஃப்ரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் அவற்றை மூடி வைக்க கூடாது.

* வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்துவிட்டு நறுக்கினால் கண்களில் எரிச்சல் இருக்காது.

* அதிகம் கனமுள்ள கல்லை தோசைக்கும், கனம் அதிகம் இல்லாத கல்லை சப்பாத்திக்கும் பயன்படுத்த வேண்டும்.

* சாதம் வடிக்கும் போது சிறிது குழைந்து விட்டால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்தால் குழையாமல் இருக்கும்.

* கேழ்வரகை ஊறவைத்து அரைத்து பால் எடுத்து அல்வா போன்று செய்யலாம். அதிக ருசியும், ஆரோக்கியமும் இருக்கும்.

* உப்பு ஜடியில் தண்ணீர் வடிவதை தடுக்க அதில் புளித்துண்டை ஜாடியில் போட்டு வைத்தால் நீர் தன்மையை புளி எடுத்துவிடும்.

* அதிகப்படியாக வாங்கி வைத்துள்ள எண்ணெய்யில் பச்சைமிளகாயை போட்டு வைத்தால் எண்ணெய் கசடு தங்காது.

* சாம்பார் மணக்க, வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் கடைசியில் சேர்த்தால் சாம்பார் மணமாக இருக்கும்.

* வெந்தயக்கீரை சமைக்கும் போது சிறிது வெல்லம் கலந்து சமைத்தால் கசப்பு தன்மை இருக்காது.

* வாழைக்காயை நறுக்கும்போது சிறிதளவு உப்புத்தூளை கைகளில் தேய்த்துக்கொண்டால் கறைபிடிக்காது, பிசுபிசுப்பு நீங்கும்.

* கறிவேப்பிலை செடி நன்றாக வளர புளித்த மோரை ஊற்றலாம்.

* பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு காரட் சேர்த்து செய்தால் கசப்பே தெரியாது.

Tags:    

Similar News