இந்த வார சமையல் டிப்ஸ் உங்களுக்காக....
- அத்தி, கிஸ்மிஸ் போன்றவற்றை பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
- கடலை மாவுடன் பாதி அளவு பார்லி மாவு சேர்த்தால் பக்கோடா ருசிக்கும்.
சமையல் என்பது முழு மனத்துடன் ஈடுபாடு காட்டி செய்ய வேண்டிய ஒரு அருமையான கலை. இதில், பல்வேறு நுணுக்கங்கள் அடங்கியுள்ளன. சமையல் செய்வதை விட பயன்படுத்தப்படும் பொருட்கள் கெட்டுபோகாமல் பாதுகாப்பதும் நமது கடமைதான். இல்லத்தரசிகளுக்கு உதவியாக இருக்க சில சமையல் டிப்ஸ் உங்களுக்காக...
* முருங்கை பிஞ்சுகளை சிறு துண்டுகளாக நறுக்கி ரசத்தில் போட்டு கொதிக்க வைத்தால் ரசம் ருசியாக இருக்கும்.
* வாழை, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை துண்டுகளாக வெட்டி எலுமிச்சை சாறு கலந்து வைத்தால் நிறம் மாறாமல் இருக்கும்.
* அத்தி, கிஸ்மிஸ் போன்றவற்றை பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
* அக்ரூட்டை முழுதாக சிறிது நேரம் வெந்நீரில் ஊற வைத்தால், எளிதாக உடைக்கலாம்.
* மோரில் பச்சை மிளகாய்க்கு பதில் சிறிது சுக்கை பொடித்து சேர்த்தால் சுவையாக இருக்கும்.
* கடலை மாவுடன் பாதி அளவு பார்லி மாவு சேர்த்தால் பக்கோடா ருசிக்கும்.
* தானியங்களை (பயறு வகைகள்) எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து 'ஹாட் பேக்'கில் போட்டு மூடி வைத்தால் மறுநாள் முளைகட்டிய தானியம் தயார்.
* வடு மாங்காய் போட்டு சாறு மீந்து விட்டால் அதில் கொத்தவரங்காய், பாகற்காய் போன்றவற்றை ஊறப்போட்டு காய வைத்து வத்தலாக எண்ணெய்யில் பொரித்து உபயோகிக்கலாம்.
* கபாப் செய்யும்போது இரண்டு பிரெட் துண்டுகளை நனைத்து பிசைந்து போட்டால் கபாப் உடையாமல் இருக்கும். சாம்பார், கூட்டு நீர்த்துப் போனால் அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, இரண்டு புது பிரெட் துண்டுகளை போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து மசித்து விட வேண்டும். சாம்பார், கூட்டு கெட்டியாகி சுவையூட்டும்.
* கோதுமை மாவில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை சேர்த்து பக்கோடா செய்தால் ருசியாக இருக்கும்.
* எந்த வகை சூப்பாக இருந்தாலும் அதனுடன் இட்லியை உதிர்த்து எண்ணெய்யில் பொரித்துப் போட்டால் சுவையாக இருக்கும்.
* பொரிப்பதற்கு வைத்திருக்கும் எண்ணெய்யில் தண்ணீர் கலந்திருந்தால், ஒரு துண்டு வாழை இலையை போட்டு வைக்கலாம். எண்ணெய் வெடிப்பது குறையும்.