சமையல்

இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...

Published On 2023-12-17 10:09 GMT   |   Update On 2023-12-17 10:09 GMT
  • பேப்பர் விரித்து அப்பளம் வைத்தால் வெகு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும்.
  • பூச்சி, புழுக்கள் வராமல் இருக்க வசம்பை போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

* அப்பளம் வைக்கும் டப்பாவில் சிறிது அரிசி போட்டு அதன் மேல் பேப்பர் விரித்து அப்பளம் வைத்தால் வெகு நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.

* சிறிய வகை மீன்களுக்கு அதிக மசாலா சேர்க்காமல் உப்பும், மிளகாய்த்தூளும் கலந்தாலே சுவை அதிகமாக இருக்கும்.

* தக்காளி சட்னி தயார் செய்யும் போது வெங்காயம், தக்காளியின் அளவு குறைவாக இருந்தால் இரண்டையும் வதக்கியவுடன் சிறிது வறுத்த வேர்க்கடலை சேர்க்க சட்னியின் அளவு கூடும்.

* கறிவேப் பிலையை காம்புடன் பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு அதன் பசுமை மாறாமல் இருக்கும்.

* பூண்டுவை கேரட் துருவுவதில் துருவினால் அதன் தோல்கள் உரிந்து, உரிக்க சுலபமாக இருக்கும்.

* இட்லி பாத்திரத்திற்கு அடியில் இரண்டு ரூபாய் நாணயத்தை போட்டு இட்லி வேக வைத்தால் தண்ணீரின் அளவை அதன் சத்தத்தை வைத்து கண்டு பிடிக்க எளிதாக இருக்கும்.

* ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

* வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

* காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

* காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

* கேழ்வரகை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போன்று செய்யலாம். கோதுமை அல்வாவைவிட ருசியாக இருக்கும்.

Tags:    

Similar News