சமையல்

இந்தவார சமையல் டிப்ஸ் உங்களுக்காக...!

Published On 2024-01-07 10:28 GMT   |   Update On 2024-01-07 10:28 GMT
  • உருளைக்கிழங்கை மசித்து கலந்தால் வடை எண்ணெய் குடிக்காது.
  • தேங்காய் பால் ஊற்றிக் சர்க்கரை பொங்கல் செய்தால் சுவையாக இருக்கும்.

1. ஏலக்காய் தூள் அரைக்கும்பொழுது ஏலக்காய் நமத்து போய்விட்டால் வெறும் வாணலியில் ஒரு நிமிடம் வதக்கி விட்டு பின்னர் அரைத்து பாருங்கள். நைசாக அரைபடும்.

2. உளுந்து வடை செய்யும்போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து கலந்து வடை செய்தால் வடை எண்ணெய் குடிக்காமல் மொறுமொறுவென்று ருசியாக இருக்கும்.

3. சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

4. பாயசத்திற்கு திராட்சைக்குப் பதிலாக பேரிச்சம் பழத்தை பொடிதாக நறுக்கி, நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

5. ரவா தோசை செய்யும்போது 2 டேபிள் ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும்.

6. கனமில்லாத மெலிதான தோசைக்கல்லை சப்பாதிக்கும், அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும் பயன் படுத்த வேண்டும்.

7. புளித்த மோர் வீட்டில் இருந்தால் சிறிதளவு வெண்டைக்காயில் சேர்த்து பொறியல் செய்தால், வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.

8. கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்த பின்பு அதிக நேரம் வதக்க கூடாது. அது பச்சையாக இருந்தால் தான் அதன் சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும்.

9. புடலங்காய் கசப்பாக இருந்தால், அவை பாம்பு ஏறிய காய் என்பார்கள். ஆகவே சிறிது கிள்ளி சுவைத்து பார்த்து வாங்க வேண்டும்.

10. அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமின்களும் அருகம்புல்லில் அதிகம்.

Tags:    

Similar News